1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By siva
Last Modified: ஞாயிறு, 18 ஏப்ரல் 2021 (10:23 IST)

சசிகுமாரின் ‘எம்ஜிஆர் மகன்’ ரிலீஸ் தேதி ஒத்திவைப்பு!

சசிகுமார் நடித்த ’எம்ஜிஆர் மகன்’ என்ற திரைப்படம் ஏப்ரல் 23ஆம் தேதி வெளியாகும் என ஏற்கனவே அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் இரண்டாவது அலை மிக வேகமாக பரவி வருவதை அடுத்து இந்த படத்தின் ரிலீஸ் தேதி ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன 
 
கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக திரையரங்குகளில் 50 சதவீத பார்வையாளர்கள் மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டு இருக்கும் நிலையில் இன்னும் சில கட்டுப்பாடுகள் விதிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது 
 
எனவே இந்த படத்தின் ரிலீஸ் தேதியை ஒத்தி வைக்கப்படுவதாகவும் புதிய ரிலீஸ் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்று படக்குழுவினர்களிடம் இருந்து தகவல் வந்ததாகவும் கூறப்படுகிறது 
 
இயக்குனர் பொன்ராம் இயக்கிய இந்தப் படத்தில் சசிகுமார், மிருணாளினி, சத்யராஜ், சரண்யா பொன்வண்ணன், சமுத்திரக்கனி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு அந்தோணிதாசன் இசையமைத்துள்ளார். வினோத் ரத்தினசாமி ஒளிப்பதிவில் விவேக் ஹர்ஷன் படத்தொகுப்பில் இந்த படம் உருவாகியுள்ளது