1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Suresh
Last Updated : வெள்ளி, 4 செப்டம்பர் 2015 (15:17 IST)

மெட்ரோ படத்தில் மீண்டும் வில்லனான பாபி சிம்ஹா

நேரம், ஜிகிர்தண்டா படங்களில் வில்லனாக நடித்த பிறகு பாபி சிம்ஹாவுக்கு ஹீரோ வாய்ப்புகள் குவிந்தன.
 
அவரும் அரை டஜன் படங்களில் ஹீரோவாக நடித்து வருகிறார். இந்நிலையில், மீண்டும் மெட்ரோ என்ற படத்தில் வில்லனாகியிருக்கிறார்.
 
மெட்ரோ தங்க வியாபாரம் மற்றும் கடத்தலை முன்வைத்து ஆனந்த் கிருஷ்ணா இயக்கும் படம். இவர், இந்தி ஆமிர் படத்தை தமிழில் ஆள் என்ற பெயரில் எடுத்தவர். 
 
மெட்ரோ படத்தில் பாபிக்கு நிழல் உலக தாதா வேடம். நாயகனைவிட பவர்ஃபுல்லான கதாபாத்திரம் என்பதால் வில்லன் வேடத்தை தேர்வு செய்துள்ளார். நாயகன் ஒரு புதுமுகம்.
 
இந்தப் படத்தில் வில்லன் பாபி சிம்ஹாவுக்கு பன்ச் டயலாக் வேறு இருக்கிறதாம்.
 
அப்போ கதாநாயக வில்லன்னு சொல்லுங்க.