செவ்வாய், 28 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வெள்ளி, 4 ஜனவரி 2019 (17:19 IST)

மீடூ ,எனக்கு பழிவாங்கும் ஆயுதமாக உதவியது - பிரபல நடிகை

சில மாதங்களுக்கு முன் இந்தியாவில் உள்ள அத்துனை துறைகளிலும் ’மீடு’ ஒரு புயலாக வந்து பிரபலமானவர்களின் இமேஜை உடைத்துப்போட்டது. பாலிவுட்டில் இதற்கு புள்ளையார் சுழி போட்டவர் நடிகை தனுஸ்ரீ தத்தா. 
பிரபல நடிகரும் காலா படத்தின் வில்லன் நடிகருமான நானா படகேர் மீது தனுஸ்ரீ தத்தா பாலியல் புகார் கூறினார். அதாவது, கடந்த 2008 ஆம் ஆண்டு நடந்த சமபவம் பற்றி தனுஸ்ரீ தத்தா புகார் தெரிவித்து பரபரப்பை ஏற்படுத்தினார்.
 
இது குறித்து அவர் கூறியதாவது:
 
இந்தியாவில் மீடு இயக்கத்தை நான் துவங்கவில்லை. தனிப்பட்ட ஒருவரை சார்ந்ததாக இயக்கம் இருந்தால் அந்த இயக்கம் வளர்ச்சி அடையாது. நான் பாதிக்கப்பட்டதால் அது பற்றி தெரிவித்தேன். அப்போது என் நடிப்புத் தொழிலை  பாதித்ததால் அந்த நிகழ்வுக்கு பழிவாங்க எண்ணினேன். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.