1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By sivalingam
Last Modified: ஞாயிறு, 17 செப்டம்பர் 2017 (22:54 IST)

சென்னை மைதானத்தில் வெற்றியை கொண்டாடிய 'மெர்சல்' விஜய்

இளையதளபதி விஜய் நடித்து வரும் 'மெர்சல்' திரைப்படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டிருக்கும் நிலையில் இன்று சென்னையில் நடந்த இந்தியா-ஆஸ்திரேலியா கிரிக்கெட் போட்டி நடந்த சேப்பாக்கம் மைதானத்தில் இந்தியா பேட்டிங் செய்தபோது ஸ்கோர் போர்டில் தளபதி விஜய்யின் ஸ்டில் தெரிந்தது.



 
 
இதனை பார்த்தவுடன் மைதானத்தில் இருந்த பார்வையாளர்கள் ஆக்ரோஷமாக கைதட்டினர். ஆஸ்திரேலிய வீரர்களுக்கு ஏன் இந்த ஆக்ரோஷம் என்பது புரியாவிட்டாலும் இந்திய வீரர்கள் அனைவருக்கும் புரிந்து அவர்களும் இணைந்து கைதட்டினர்
 
ஸ்கோர் போர்டில் விளம்பரம் செய்ய அதற்குரிய கட்டணத்தை கட்டினால் எந்த விளம்பரமும் வரும் என்பது தெரிந்ததே. இந்த நிலையில் சென்னை மைதானத்தில் 'மெர்சல் விஜய் தோன்றி மெர்சலாக்கும் ஐடியா படக்குழுவினர்களின் புத்திசாலித்தனமான செய்கையாக பார்க்கப்படுகிறது.