‘மெர்சல்’ ரகசியத்தைப் போட்டுடைத்த ‘பாகுபலி’ கதையாசிரியர்

cauveri manickam| Last Modified புதன், 2 ஆகஸ்ட் 2017 (13:23 IST)
‘மெர்சல்’ படத்தில் என்ன ஹைலைட்ஸ் என்பதை வெளிப்படையாகச் சொல்லியிருக்கிறார் திரைக்கதை எழுதிய விஜயேந்திர பிரசாத். 
இயக்குநர் எஸ்.எஸ்.ராஜமெளலியின் தந்தை விஜயேந்திர பிரசாத். பிரமாண்ட வெற்றிகண்ட ‘பாகுபலி’ படத்துக்கு திரைக்கதை எழுதியவர் இவர்தான். தற்போது அட்லீ இயக்கத்தில் விஜய் நடித்துவரும் ‘மெர்சல்’ படத்துக்கு திரைக்கதை எழுதியவரும் இவர்தான். “இதற்கு முன் அட்லீ இயக்கிய இரண்டு படங்களுமே எனக்குப் பிடிக்கும். அதேமாதிரி அசத்தலான கான்செப்ட்டோடுதான் என்னைப் பார்க்க வந்தார். அது பிடித்துப்போய் திரைக்கதை எழுதினேன். இந்தப் படத்தில், நிறைய எமோஷனல் காட்சிகள் இருக்கின்றன. அவற்றைப் பார்க்கும்போது, ரசிகர்கள் காட்சியோடு ஒன்றிணைந்து கைதட்டுவர்” எனத் தெரிவித்துள்ளார் விஜயேந்திர பிரசாத்.

விஜய் மூன்று வேடங்களில் நடித்துவரும் இந்தப் படத்தில், நித்யா மேனன், சமந்தா, காஜல் அகர்வால் என மூன்று ஹீரோயின்கள் நடிக்கின்றனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். இதன் இசை வெளியீட்டு விழா, இம்மாதம் 28ஆம் தேதி நடைபெற உள்ளது.

webdunia

இதில் மேலும் படிக்கவும் :