மெர்சல் படத்துக்கு மேலும் ஒரு கவுரவம்

m
Last Modified புதன், 18 ஏப்ரல் 2018 (13:08 IST)
மெர்சல் திரைப்படம் தென்கொரியாவில் நடக்கும் சர்வதேச திரைப்பட விழாவில் பங்கேற்பதற்காக அழைப்பு வந்துள்ளது

 
 
இளையதளபதி விஜய் நடித்த 'மெர்சல்' திரைப்படம் கடந்த ஆண்டு தீபாவளி அன்று வெளியாகி மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இந்த படத்தின் டீசர், டிரைலர் உலக அளவில் சாதனை செய்தது. அதேபோல் வசூலிலும் ரூ.200 கோடியை தாண்டியது.
 
இந்த படம் சமீபத்தில் நடந்த  பிரிட்டன் தேசிய திரைப்பட விழாவில் சிறந்த வெளிநாட்டு படமாக தேர்வு செய்யப்பட்டது. மேலும், இந்திய தேசிய விருத்திற்காக பரிந்துரையும் செய்யப்பட்டது.
m
 
இந்நிலையில், மெர்சல் திரைப்படம் தென்கொரியாவில் நடக்கவுள்ள சர்வதேச திரைப்பட விழாவில் பங்கேற்க அழைப்பு வந்துள்ளதாக அப்படத்தின் தயாரிப்பு நிறுவனமான தேனாண்டாள் பிலிம்ஸ் தெரிவித்துள்ளது.


இதில் மேலும் படிக்கவும் :