Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

பைத்தியக்கார மருத்துமனையாக மாறிய பிக்பாஸ் வீடு - வீடியோ!

Sasikala| Last Updated: செவ்வாய், 1 ஆகஸ்ட் 2017 (17:04 IST)
பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஒவ்வொரு நாளும் ஏதாவதொரு புதுபுது டாஸ்க் கொடுக்கப்படும். அதில் வெற்றி பெறுபவர்களுக்கு பரிசும்  கொடுக்கப்படுகிறது. நாளுக்கு நாள் சூடுப்பிடித்து வருகின்றது. இந்நிலையில் சமீபத்தில் பிந்து மாதவி வரவு ரசிகர்களை மேலும்  பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 
இந்நிலையில் நேற்றைய ப்ரொமோவில் பிக்பாஸ் எப்போதும்போல் ஒரு டாஸ்க் கொடுத்துள்ளார். அதில் இன்று பிக்பாஸ் குடும்பத்தினர் அனைவரும் பைத்தியமாக(மெண்டலாக) நடிக்க வேண்டுமாம். இதில் போட்டியாளர்கள் பைத்தியங்களாக நடிக்க  வேண்டும் என்பது பிக்பாஸ் உத்தரவு.

 
ப்ரொமொ வீடியோவில் ஜூலியை உண்மையான பைத்தியம் போல் நடித்து வசனம் பேசியிருக்கிறார். அதேபோல் போட்டியாளர்களும் பைத்தியங்களாகவும், சக்தி பைத்தியங்களை மேய்க்கும் கண்காணிப்பாளராகவும், பைத்தியங்களுக்கு வைத்தியம் பார்க்கும் வைத்தியராக வையாபுரியும் நடித்துள்ளனர். இந்த ப்ரோமோ ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.  பார்க்கும் நமக்கு பைத்தியம் பிடிக்காமல் இருந்தால் சரி.

 


இதில் மேலும் படிக்கவும் :