மேக்னாராஜூக்கு ஆண் குழந்தை: மறைந்த தந்தையின் புகைப்படம் அருகே குழந்தை!
மேக்னாராஜூக்கு ஆண் குழந்தை:
பிரபல கன்னட நடிகர் சிரஞ்சீவி சர்ஜா சமீபத்தில் மாரடைப்பு காரணமாக திடீரென மரணமடைந்தார் என்பதும் அப்போது அவருடைய மனைவியும் நடிகையுமான மேக்னாராஜ் கர்ப்பமாக இருந்தார் என்பதும் தெரிந்ததே
சமீபத்தில் நடந்த மேக்னா ராஜின் வளைகாப்பு நிகழ்ச்சியில் கூட சிரஞ்சீவி சர்ஜா போன்றே மெழுகு சிலை உருவாக்கி அதன் அருகில் உட்கார்ந்துகொண்டு புகைப்படத்திற்கு மேக்னாராஜ் போஸ் கொடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் தற்போது மேக்னாராஜ் ஒரு ஆண் குழந்தை பிறந்துள்ளது. இதனை அவர் தனது சமூக வலைத்தளத்தில் குழந்தையின் புகைப்படத்தை பதிவு செய்துள்ளார். மேலும் குழந்தையை மறைந்த சார்ஜாவில் புகைப்படம் அருகே வைத்து இருப்பது போன்ற ஒரு புகைப்படத்தை எடுத்து சமூக வலைத்தளத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளார். இந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது
குழந்தைக்கு கடவுளாக இருந்து சிரஞ்சீவி சார்ஜா ஆசீர்வதிப்பார் என்ற அர்த்தத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள இந்த புகைப்படத்திற்கு அவரது ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்