வியாழன், 26 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : சனி, 3 ஆகஸ்ட் 2019 (15:40 IST)

தன்னை திட்டியவர்களுக்கு முத்தம் கொடுத்து மீரா மிதுன் வெளியிட்ட முதல் வீடியோ!

தன்னை திட்டியவர்களுக்கு முத்தம் கொடுத்து மீரா மிதுன் வெளியிட்ட முதல் வீடியோ! 


 
பிக்பாஸ் 3வது சீசனில் பங்கேற்று மக்கள் மத்தியில் அதிகம் வெறுப்பை சம்மதித்து கடைசியில் அசிங்கப்பட்டு வெளியேற்றப்பட்டவர் மீரா மிதுன். இதனால் இவர் வெளியே வந்த பிறகும் மக்கள் இவர் மீது மிகுந்த கோபத்தில் இருந்து வருகின்றனர். காரணம், சேரன் மீது இவர் சுமத்திய அந்த அபாண்டமான பொய் தான். 
 
ஆனால், வீட்டை விட்டு வெளியேற்றப்பட்டதும் அதைப்பற்றியெல்லாம் பெரிதாக கவலைப்படாமல் வந்த இரண்டு நாட்களிலேயே கவர்ச்சி போட்டோ ஷூட் நடத்தி தனக்கு ஆதரவளித்த அனைவருக்கும் நன்றி என கூறி புகைப்படங்ககளை பதிவேற்றம் செய்திருந்தார். இதனை கண்ட நெட்டிசன்ஸ், ஆமாம்..! உங்களுக்கு யாரு சப்போர்ட் பண்ணினது போவியா வேலைய பார்த்துட்டு...! என கூறி கிண்டலடித்து திட்டினார்கள். 
 
இந்நிலையில் தற்போது அதற்கு பதிலளிக்கும் விதமாக வீடியோ ஒன்றை தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். அதில் அவர் கூறியுள்ளதாவது,   எனக்கு இத்தனை நாள் ஆதரவு தெரிவித்த தனது ரசிகர்களுக்கு நன்றி மேலும் என்னை திட்டினவர்களுக்கும் நன்றி என்று கூறி பிளையிங் கிஸ் கொடுத்து வீடியோவை பதிவு செய்துள்ளார். 
 
ஆனால் அதைப்பார்த்த ரசிகர்கள் மீண்டும் "உனக்கெல்லாம் யார் ஆதரவு தெரிவித்தது..?  ரசிகர்கள் உனக்கு இருக்கிறார்களா..! என கூறி கிண்டலடித்து வருகின்றனர்.