திங்கள், 27 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வியாழன், 18 மார்ச் 2021 (08:05 IST)

விஜய் & சூர்யாவிடம் மன்னிப்புக் கேட்ட மீரா மிதுன்! டிவிட்டரில் வீடியோ வெளியீடு!

நடிகை மீரா மிதுன் தான் விஜய் மற்றும் சூர்யா ஆகியவர்களின் குடும்பங்களைப் பற்றி தவறாக பேசியதற்கு மன்னிப்புக் கேட்டுள்ளார்.

நடிகர்கள் விஜய் மற்றும் சூர்யாவை மிகவும் தரக்குறைவாக பேசி விமர்சனம் செய்து வந்தார் நடிகையும் மாடலுமான மீரா மிதுன். இதற்கு எதிர்வினை ஆற்றும் சம்மந்தப்படட் நடிகர்களின் ரசிகர்களும் ஆபாசத்தை வாரி உமிழ்ந்தனர். இரு தரப்பும் ஒன்றுக்கு ஒன்று சளைத்தது அல்ல என்கிற ரீதியில் பேசி வருகின்றன.

இந்நிலையில் இப்போது மீரா மிதுன் டிவிட்டரில் ஒரு வீடியோவை வெளியிட்டு உள்ளார். அதில் ‘விஜய், சூர்யா பற்றி அவதுாறாகப் பேசியதற்கு, திருநங்கையும், அதிமுக பிரமுகருமான அப்சரா ரெட்டி தான் காரணம். அவரின் சைபர் புல்லிங்கில் சிக்கிதான் நான் அப்படி பேசுவதற்குக் கட்டாயப்படுத்த பட்டேன். அதற்காக அவர்களிடமும் ரசிகர்களிடமும் மன்னிப்புக் கோருகிறேன். அப்சரா ரெட்டியை உடனடியாக கட்சியில் இருந்து அதிமுகவினர் நீக்க வேண்டும்’ எனக் கோரிக்கையும் வைத்துள்ளார்.