புதன், 25 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By siva
Last Modified: திங்கள், 21 டிசம்பர் 2020 (19:43 IST)

’அண்ணாத்த’ படப்பிடிப்பில் இணைந்த குஷ்பு-மீனா: வைரலாகும் புகைப்படம்!

’அண்ணாத்த’ படப்பிடிப்பில் இணைந்த குஷ்பு-மீனா
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் ’அண்ணாத்த’ படத்தின் படப்பிடிப்பை மீண்டும் சமீபத்தில் தொடங்கியது என்பதும் இந்த படத்தின் படப்பிடிப்பிற்காக தனி விமானத்தில் ரஜினிகாந்த், நயன்தாரா ஆகியோர் ஹைதராபாத்துக்கு சென்றனர் என்பதையும் ஏற்கனவே பார்த்தோம் 
 
இந்த நிலையில் தற்போது இந்த படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்து வரும் குஷ்பு மற்றும் மீனா ஆகிய இருவரும் படப்பிடிப்பில் இணைந்து உள்ளனர், இவர்கள் இருவரும் ஹைதராபாத்துக்கு செல்லும் வழியில் விமான நிலையத்தில் எடுத்துக்கொண்ட செல்பி புகைப்படம் ஒன்று தற்போது மீனாவின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வைரலாகி வருகிறது 
 
ரஜினிகாந்த் ஜோடியாக மீனா மற்றும் குஷ்பு ஆகிய இருவரும் நடிக்க இருப்பதாகவும் குஷ்புவுக்கு சற்றே நெகட்டிவ் கேரக்டர் என்றும் கூறப்பட்டு வருகிறது. இந்த நிலையில் ’அண்ணாத்த’ படத்தின் படப்பிடிப்பு ஜனவரி இறுதிக்குள் முடிந்துவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது