தேவர் மகன் படத்தில் மீனா… எந்த கதாபாத்திரத்தில் தெரியுமா?
தேவர் மகன் படத்தில் நடிகை மீனா 3 நாட்கள் நடித்த பின்னர் வேண்டாம் என்று நிராகரிக்கப்பட்டாராம்.
தமிழ் சினிமாவின் கிளாசிக்குகளில் தேவர் மகன் படத்துக்கு என்றும் நிலையான இடம் உண்டு. காட்பாதர் படத்தைத் தழுவி அமைக்கப்பட்ட திரைக்கதை, கமல்-சிவாஜி காம்பினேஷன், இளையராஜாவின் இசை, பி சி ஸ்ரீராமின் நேர்த்தியான ஒளிப்பதிவு என பல்வேறு மாஸ்டர்களின் கைவண்ணத்தில் உருவானப் படம் பட்டி தொட்டியெங்கும் ஹிட் ஆனது.
இந்த படத்தில் கௌதமி மற்றும் ரேவதி ஆகிய இருவரும் கதாநாயகிகளாக நடித்திருந்தனர். ஆனால் முதலில் ரேவதி கதாபாத்திரத்தில் நடிக்க மீனாதான் தேர்வானாராம். ஆனால் அப்பொது மீனா அந்த கதாபாத்திரத்துக்கு தேவையான முதிர்ச்சியோடு இல்லை என சொல்லி இயக்குனர் பரதன் நீக்கிவிட்டாராம். அதன் பின்னர்தான் ரேவதி அந்த கதாபாத்திரத்தில் நடித்தாராம்.