திங்கள், 27 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: செவ்வாய், 11 பிப்ரவரி 2020 (18:19 IST)

ஆட்டத்தை ஆரம்பித்துவிட்ட ‘மாஸ்டர்’ விஜய்! இனி ஒரே பரபரப்பு தான்

விஜய் நடித்து வரும் ‘மாஸ்டர்’ படத்தின் தயாரிப்பு நிறுவனமான எக்ஸ்பி நிறுவனத்தின் அதிகாரபூர்வமான  டுவிட்டர் பக்கத்தில் ”நம்ம ஆட்டத்தை ஆரம்பித்து விடலாமா” என்ற கேள்வி எழுப்பப்பட்டு மாஸ்டர் படத்தின் அப்டேட் மிக விரைவில் வெளிவரும் என குறிப்பிடப்பட்டுள்ளது
 
சமீபத்திய அரசியல் மற்றும் பரபரப்பான நிகழ்வுகளிலிருந்து இந்த கேள்வியின் உண்மையான அர்த்தம் என்ன என்பதை புரிந்து கொண்ட விஜய் ரசிகர்கள் தங்கள் இஷ்டத்திற்கு பதிலடி கொடுத்து கமெண்ட்களை அளித்து வருவதால் டுவிட்டர் இணையதளத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது 
 
இருப்பினும் ‘மாஸ்டர்’ படத்தின் அப்டேட் மிக விரைவில் ஆரம்பிக்கப்பட உள்ளது என்பதில் இந்த டுவிட்டில் இருந்து தெரிகிறது. முதல்கட்டமாக இந்த படத்தின் ஆடியோ விழா குறித்த தகவல்கள் வெளிவரும் என்றும் இந்த ஆடியோ விழாவில் விஜய்யின் மாஸ் ஸ்பீச்சை கேட்க விஜய் ரசிகர்கள் மட்டுமின்றி கோடிக்கணக்கானோர் எதிர்பார்த்து காத்திருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது
 
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் அனிருத் இசையில் உருவாகி வரும் இந்த படத்தில் விஜய், மாளவிகா மோகனன், விஜய்சேதுபதி, ஆண்ட்ரியா, சாந்தனு, அர்ஜூன் தாஸ், சஞ்சீவ், ஸ்ரீமான், ரம்யா, கெளரி கிஷான், தீனா உள்பட பலர் நடித்து வருகின்றனர். சத்யன் சூரியன் ஒளிப்பதிவில், பிலோமினா ராஜ் படத்தொகுப்பில் உருவாகி வரும் இந்த படத்தை விஜய்யின் உறவினர் சேவியர் பிரிட்டோ தயாரித்து வருகிறார். இந்த படம் வரும் ஏப்ரல் மாதம் தமிழ்ப்புத்தாண்டு விருந்தாக வெளியாகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது