1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By siva
Last Modified: புதன், 2 டிசம்பர் 2020 (16:27 IST)

’மாஸ்டர்’ ரிலீஸில் புதிய திருப்பம்: தயாரிப்பாளரின் அதிரடி முடிவு

தளபதி விஜய் நடித்த ’மாஸ்டர்’ திரைப்படம் கடந்த ஏப்ரல் மாதமே ரிலீசுக்கு தயாரானது என்பது தெரிந்ததே. ஏப்ரல் 9ஆம் தேதி ரிலீஸ் செய்ய திட்டமிடப்பட்டிருந்த இந்த படம் கொரோனா வைரஸ் ஊரடங்கு காரணமாக தள்ளிப் போய்க்கொண்டே இருக்கிறது
 
இந்த படம் ஓடிடியில் ரிலீசாகும் என்று செய்திகள் கசிந்த நிலையில் தியேட்டரில் தான் ரிலீஸாகும் என்று சமீபத்தில் இந்த படத்தின் தயாரிப்பாளர் உறுதி செய்தார். இந்த நிலையில் வரும் ஜனவரி 13-ஆம் தேதி பொங்கல் விருந்தாக இந்த படத்தை திரையரங்குகளில் திரையிட ஏற்பாடுகள் நடந்து கொண்டிருக்கின்றன இதுகுறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளிவரும் என தெரிகிறது 
 
இந்த நிலையில் தமிழ் மட்டுமின்றி ஒரே நேரத்தில் தெலுங்கு உள்பட பல இந்திய மொழிகளில் வெளியிட தயாரிப்பாளர் திட்டமிட்டு வருவதாகவும் அதற்கான பணிகளும் தற்போது நடைபெற்று வருவதாகவும் தெரிகிறது 
 
குறிப்பாக ஹிந்தி மொழியில் ’மாஸ்டர்’ படத்தை டப் செய்து வெளியிட மிகப்பெரிய போட்டி ஏற்பட்டுள்ளது என்பதும் பலர் இந்த படத்தை இந்தி மொழியில் டப் செய்து வெளியிட முன் உள்ளனர் என்றும் தகவல்கள் வெளிவந்துள்ளது. இதனால் ’மாஸ்டர்’ படத்தின் வருமானம் மிகபெரிய அளவில் சாதனை செய்ய வாய்ப்புள்ளதாக கருதப்படுகிறது