’மாஸ்டர்’ தயாரிப்பாளரின் அடுத்த பட டைட்டில் அறிவிப்பு!
மாஸ்டர் தயாரிப்பாளரின் அடுத்த பட டைட்டில் அறிவிப்பு!
தளபதி விஜய் நடித்த மாஸ்டர் திரைப்படத்தை முதலில் தயாரித்தது விஜய்யின் உறவினரான சேவியர் பிரிட்டோ என்பது தெரிந்ததே. அதன் பின்னர்தான் லலித் இந்த படத்தின் தயாரிப்பாளராக மாறினார் என்பது குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் சேவியர் தயாரிக்க இருக்கும் அடுத்த படம் குறித்த தகவல் தற்போது வெளிவந்துள்ளது. சேவியர் பிரிட்டோ பின் அடுத்த தயாரிப்பு படத்திற்கான பூஜை இன்று சென்னையில் நடைபெற்றது
அழகிய கண்ணே என்ற டைட்டிலில் உருவாகவிருக்கும் இந்தப் படத்தை ஆர்.விஜயகுமார் என்பவர் இயக்க உள்ளார். பிப்ரவரி 15ஆம் தேதி முதல் இந்த படத்தின் படப்பிடிப்பு நடைபெறும் என்று கூறப்படுகிறது
ரகுநாதன் என்பவர் இந்த படத்தை இயக்க உள்ளார் என்பதும் லியோ சிவக்குமார் மற்றும் சஞ்சிதா ஷெட்டி ஆகிய இருவரும் முக்கிய கேரக்டரில் நடிக்க உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.