1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified: திங்கள், 11 ஜனவரி 2021 (22:11 IST)

விஜய்யின் 'மாஸ்டர்'' பட காட்சிகள் இணையதளத்தில் வெளியானது ! படக்குழு அதிர்ச்சி

விஜய்யின் மாஸ்டர் படத்தில் இடம்பெற்றுள்ள காட்சிகள் இணையதளத்தில் வெளியாகிவுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

விஜய் ,சேதுபதி, நடிப்பில் உருவாகியுள்ள படம் மாஸ்டர். இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக மாளவிகா மோகனன் நடித்துள்ளார். அனிருத் இசையமைத்துள்ளார்.லோகேஷ் கனகராஜ் இப்படத்தை இயக்கியுள்ளார்.

வரும் ஜனவரி 14 ஆம் தேதி இப்படம் உலகமெங்கும் தியேட்டரில் ரிலீஸாகவுள்ள நிலையில் இப்படத்தின் புரமோஷன் பணிகள் விறுவிறுப்பான நடைபெற்று வருகின்றன
.
. மாஸ்டர் படம் கேரளாவில் 13 ஆம் தேதியும், வரும் ஜனவரி 14 ஆம் தேதி தமிழகத்தில் திரையிடப்படுகிறது

இந்நிலையில் இன்று மாஸ்டர் படத்தின் ஆக்சன் காட்சிகள் கொண்ட 5 வது புரோமோவை வெளியிட்டுள்ளது படக்குழு.

ஆனால் படக்குழுக்குகே அதிர்ச்சி ஏற்படுத்தும் வகையில் மாஸ்டர் படத்தில் இடம்பெற்றுள்ள ஓபனிங் காட்சி உள்ளிட்ட சுமார் 1 மணிநேரம் ஓடக்கூடிய காட்சிகள் இணையதளத்தில் வெளியாகி பெரும்பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தற்போது இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தனது டுவிட்டர் பக்கத்தில், அன்புக்குரியவர்களுக்கு, மாஸ்டர் படம் ஒன்றரை வருடப் போராட்டங்களுக்குப் பிற்கு திரைக்கு வருகிறது. நீங்கள் எல்லோரும் தியேட்டரில் படம் பாருங்கள். எதாவது படம் குறித்து லீக் வெளியே வந்தால் அதை ஷேர் செய்ய வேண்டாம். நன்றி இது உங்களுடைய மாஸ்டர் எனத் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.