செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified: திங்கள், 18 ஜனவரி 2021 (17:22 IST)

மேடையில் மன்னிப்புக் கேட்ட ’’மாஸ்டர்’’ பட நடிகர் !

நடிகர் விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவான படம் மாஸ்டர். இப்படத்தில் விஜய் சேதுபதி வில்லனாகவும். விஜய்க்கு ஜோடியாக மாளாவிகா  மோகனன் நடித்திருந்தார். மிகப்பெரும் வரவேற்பைப் பெற்றுள்ள இப்படம் ஒரே வாரத்தில் 150 கோடி வசூல் செய்துள்ளது.

இந்நிலையில் இப்படத்தில் இளம் வயது விஜய் சேதுபதியாக நடித்திருந்த மகேந்திரன் வெட்டிப் பசங்க இசைவெளியீட்டு விழாவில் கலந்துகொண்டார். அப்போது அவர் பேசியதாவது:

மாஸ்டர் படத்தில் எனக்கு வாய்ப்புக் கொடுத்த லோகேஷ் கனகராஜுக்கு நன்றி. விஜய் சேதுபதி யார் மனதையும் புண்படும்படி பேசமட்டார். கேக் வெட்டிய சர்ச்சையில் அவர் இங்கு இருந்திருந்தால் மன்னிப்பு கேட்டிருப்பார். அவருக்கு பதிலாக நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன் எனத் தெரிவித்துள்ளார்.

மேலும், சமீபத்தில் விஜய் சேதுபதி தனது பிறந்த நாளின்போது பட்டாக்கத்தியில் கேக் வெட்டிக்கொண்டாடியதால் பெரும் சர்ச்சை உருவானது குறிப்பிடத்தக்கது.