வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Suresh
Last Updated : புதன், 7 அக்டோபர் 2015 (10:26 IST)

ப்ளே பாயாக நடிக்கும் பொறியாளர்

வரும் 9 -ஆம் தேதி மசாலா படம் திரைக்கு வருகிறது. சினிமாவை விமர்சனம் என்ற பெயரில் வெட்டி கூறுபோடும் எழுத்தாளர் ஒருவரிடம், எல்லாமே மோசமான படங்கள்னு சொல்றீங்களே.


 

 
நீங்களே ஒரு நல்ல படத்தை எடுங்க என்று பொறுப்பை தருகிறார்கள். அவர் எடுக்கும் படமும், அவர் விமர்சிக்கும் மசாலா படம் போலவே உள்ளது. இதுதான் மசாலா படத்தின் கதை.
 
பாபி சிம்ஹா, மிர்ச்சி சிவா ஆகியோருடன் புதுமுகம் கௌரவும் இந்தப் படத்தில் நடித்துள்ளார். கௌரவ் அடிப்படையில் ஒரு பொறியாளர். பொறியாளர் திரைக்கு வந்தது எப்படி? அவரே சொல்கிறார்.
 
"பொறியாளர் கல்வி தகுதி பெற்ற எனக்கு நடிப்பின் மேல் தீவிரக் காதல் உண்டு. அதற்காகவே பிரத்தியேகமாக உள்ள பயிற்சி அரங்குகளில் பயின்றேன். எல்லா மொழி படங்களையும் பார்த்து நடிப்பை பயின்றேன்.
 
இந்த நேரத்தில் தான் இயக்குனர் லக்ஷ்மணை நேரில் சந்தித்தேன். அவர் மசாலா படத்துக்காக ப்ளே பாய் கதாப்பாத்திரம் ஒன்று உள்ளதாகவும் அதற்கு நான் பொருத்தமாக இருப்பேன் என்று கருதுவதாகவும் கூறி என்னை தேர்ந்து எடுத்தார்.
 
பல்வேறு படங்களை பல மொழிகளில் பார்த்து இருந்த எனக்கு இந்தக் கதைக்களம் மிக வித்தியாசமாக தெரிந்தது. மிர்ச்சி சிவா, பாபி சிம்ஹா, நான் உட்பட மூன்று நாயகர்கள் இருந்தாலும் நாங்கள் கிளைமாக்ஸ் காட்சியில் தான் ஒரே பிரேமில் வருவோம். அந்த அளவுக்கு வித்தியாசமான திரைக்கதை அமைத்துள்ளார் லக்ஷ்மன்.
 
இப்படம் இம்மாதம் 9-ம் தேதி திரைக்கு வெளிவர உள்ளது. எனக்கு வாய்ப்பு அளித்த இயக்குனர் லக்ஷ்மன் தயாரிப்பாளர் விஜய் ராகவேந்தர் ஆகியோருக்கு மனமார்ந்த நன்றி" என்றார்.