திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: வெள்ளி, 27 ஜனவரி 2023 (08:02 IST)

என்ன மாறுவேடப் போட்டி மாதிரி இருக்கு… ட்ரோல் ஆகும் விஷாலின் ‘மார்க் ஆண்டனி’ பட போஸ்டர்!

விஷால் மற்றும் எஸ் ஜே சூர்யா நடிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கி வரும் மார்க் ஆண்டனி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு தற்போது நடந்து வருகிறது.

இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் விஷால் மார்க் ஆண்டனி  படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆனார் விஷால். இந்த படத்தை விஷாலின் எனிமி படத்தை தயாரித்த மினி ஸ்டுடியோஸ் வினோத்குமாரே தயாரிக்கிறார். இந்நிலையில் இந்த படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்க எஸ் ஜே சூர்யாவை ஒப்பந்தம் செய்துள்ளனர்.  கதாநாயகியாக ரீத்து வர்மா நடிக்கிறார். இந்த படத்துக்கு ஜி வி பிரகாஷ் குமார் இசையமைக்கிறார்.

சில நாட்கள் படப்பிடிப்புக்குப் பிறகு நிறுத்தப்பட்ட படப்பிடிப்பு தற்போது மீண்டும் தொடங்கியுள்ளது. அதையடுத்து எஸ் ஜே சூர்யா, விஷால் மற்றும் சுனில் ஆகியோர் நடிக்கு முக்கியக் காட்சிகளை இயக்குனர் படமாக்கி வருகிறார்.

இதையடுத்து மூவரும் இடம்பெறும் படத்தின் புதிய போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. அதில் விஷால் மற்றும் எஸ் ஜே சூர்யா ஆகியோருக்கு பொறுத்தப்பட்டு விக்குகள் மற்றும் ஒட்டுத்தாடி ஆகியவை மிகவும் அமெச்சூராக தெரியும் வண்ணம் உள்ளன. இதைப் பார்த்து பலரும் “குழந்தைகள் மாறுவேட போட்டியா” என கலாய்க்க ஆரம்பித்துள்ளனர்.