வெள்ளி, 29 மார்ச் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Murugan
Last Modified: செவ்வாய், 9 மே 2017 (16:31 IST)

ஏ.ஆர்.ரஹ்மானை பின்பற்றினேன் ; பாகுபலி இசையமைப்பாளர் ஓபன் டாக்

பாகுபலி படத்தின் முதல் பாகம் ஏற்கனவே வெளியாகி வெற்றி பெற்றிருந்த நிலையில், சமீபத்தில் வெளியான பாகுபலி2 படம் உலக அளவில் சினிமா ரசிகர்களை கவர்ந்ததோடு மட்டுமில்லாமல்,  இதுவரை ரூ.1000 கோடியை வசூலித்து சாதனை படைத்திருக்கிறது.


 

 
இந்த படத்திற்கு இசையமைத்தவர் கீரவாணி என அழைக்கப்படும் மரகதமணி. இவர் தமிழில் அழகன், வானமே எல்லை, ஜாதிமல்லி உள்ளிட்ட படங்களுக்கு இசையமைத்துள்ளார். இவர் இயக்குனர் ராஜமௌலிக்கு நெருங்கிய உறவினரும் கூட. எனவே, அவரின் அனைத்து படங்களுக்கும் இவர்தான் இசையமைப்பாளர். 


 

 
பாகுபலி படத்தில் இடம் பெற்ற உயிரோட்டமான மற்றும் பிரம்மாண்டமான காட்சிகளுக்கு மரகதமணி அளித்த பின்னணி இசை எல்லோரையும் கட்டிப்போட்டது. அதேபோல், பாகுபலி முதல் மற்றும் இரண்டாம் பாகத்தில் இடம்பெற்ற பாடல்களும் அனைவரையும் கவர்ந்தது.
 
இந்நிலையில், பாகுபலி படத்தில் தென்னிந்தியாவின் முன்னணி பாடகர், பாடகிகளை நீங்கள் ஏன் பயன்படுத்தவில்லை என ஒருவர் சமூக வலைத்தளங்களில் கேள்வி எழுப்பியிருந்தார். இதற்கு பதிலளித்த மரகதமணி, அதற்கு ஏ.ஆர்.ரஹ்மானே காரணம், அவர் தன்னுடைய பல படங்களில் புதிய புதிய பாடகர்களை அறிமுகப்படுத்தி, அவர்களை பெரிய பாடகர்களாக உருவாக்கினார். எனவே, அவரை நான் பின்பற்றுகிறேன்” என மரகதமணி பதிலளித்துள்ளார்.