1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Prasanth Karthick
Last Modified: வியாழன், 29 பிப்ரவரி 2024 (08:57 IST)

தமிழக திரையரங்குகளை ஆக்கிரமிக்கும் ‘மஞ்சும்மல் பாய்ஸ்’! – படக்குழுவை அழைத்து பாராட்டிய உதயநிதி ஸ்டாலின்!

Manjummel Boys crew
சமீபத்தில் வெளியான மலையாள படமான ‘மஞ்சுமல் பாய்ஸ்’ தமிழகத்தில் ஹவுஸ்ஃபுல் காட்சிகளாக ஓடி வரும் நிலையில் படக்குழுவினரை உதயநிதி ஸ்டாலின் அழைத்து பாராட்டியுள்ளார்.



கமல்ஹாசன் நடித்து சந்தான பாரதி இயக்கி 1991ல் வெளியான படம் குணா. இந்த படத்தில் இடம்பெறும் குகை, ‘குணா குகை’ என்றே பெயர் பெற்றது. இந்த குகைக்கு சென்ற கேரளாவை சேர்ந்த இளைஞர்களுக்கு நேர்ந்த சம்பவங்கள் குறித்த உண்மை கதையை அடிப்படையாக கொண்டு சிதம்பரம் பொடுவல் இயக்கத்தில் வெளியான படம் ‘மஞ்சுமல் பாய்ஸ்’

படம் வெளியானது முதலே கேரளா, தமிழ்நாடு ஏரியாவில் நல்ல ரெஸான்ஸ். தமிழகத்தில் சென்னை, திருச்சி, கோவை என பெருநகர தியேட்டர்களில் ஓடிக் கொண்டிருக்கும் ‘மஞ்சுமல் பாய்ஸ்’ அதன் ஹிட் காரணமாக மயிலை, திருவாரூர் என பி செண்டர், சி செண்டர் தியேட்டர்களிலும் ரிலீஸாகி வருகிறது.


இந்நிலையில் படக்குழுவினர் குணா படத்தில் நடித்த கமல்ஹாசன் மற்றும் இயக்கிய சந்தானபாரதியை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனர். அதை தொடர்ந்து தற்போது அமைச்சர் உதயநிதி ஸ்டாலினும் படக்குழுவினரை அழைத்து பாராட்டுகளை தெரிவித்துள்ளார். இதுகுறித்து பதிவிட்டுள்ள அவர் ” மலையாளத்தில் சமீபத்தில் வெளியான #ManjummelBoys திரைப்படம் பல்வேறு தரப்பிலும் வரவேற்பை பெற்று வருகிறது. இந்நிலையில், அத்திரைப்படக் குழுவினரை இன்று நேரில் சந்தித்தோம். நாம் அப்படத்தை பாராட்டியதற்காக அவர்கள் நன்றி தெரிவித்து அன்பை வெளிப்படுத்தினர். ஒளிப்பதிவு, பின்னணி இசை, திரைக்கதை, காட்சி அமைப்பு என அனைத்து வகையிலும் தரமான படைப்பாக #ManjummelBoys - ஐ தந்த படக்குழுவுக்கு என் வாழ்த்துகள்.” என்று தெரிவித்துள்ளார்.

முன்னதாக மம்முட்டி நடிப்பில் வெளியான ‘பிரமயுகம்’ தமிழகத்தில் நல்ல வரவேற்பை பெற்றது. அதை தொடர்ந்து மஞ்சுமல் பாய்ஸ் படமும் ஹிட் அடித்துள்ளது. தொடர்ந்து தமிழ் ஏரியாவில் மலையாள படங்கள் ஹிட் கொடுப்பது பலருக்கும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

Edit by Prasanth.K