திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: திங்கள், 5 டிசம்பர் 2022 (15:11 IST)

திருமணத்தின் போதும் உருவ கேலி செய்தார்கள்… மஞ்சிமா மோகன் தகவல்!

தமிழ் சினிமாவில் இளம்  நடிகர் கவுதம் கார்த்திக். இவர் மணிரத்னம் இயக்கிய கடல் படத்தில் நடிகராக அறிமுகம் ஆனார். அதன் பின்னர், இவன் தந்திரன், தேவராட்டம் , இருட்டு அறையில் முரட்டுக் குத்து, ஆனந்தம் விளையாடும் வீடு  உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். இவர் அச்சம் என்பது மடமையடா என்ற படத்தில் நடித்த  நடிகை மஞ்சிமா மோகனை காதலிப்பதாக தகவல் வெளியான நிலையில் சமீபத்தில் இருவருமே அந்த தகவலை உறுதி செய்தனர்.

இந்நிலையில் சில தினங்களுக்கு முன்னர் சென்னையில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் திருமணம் செய்துகொண்டனர். இது சம்மந்தமான புகைப்படத்தை இருவரும் மணக்கோலத்தில் – வெளியிட அது வைரல் ஆனது.

இந்நிலயில் கடந்த சில ஆண்டுகளாகவே மஞ்சிமா மோகன் உடல் எடை அதிகமானது பற்றிய உருவகேலிகள் சமூகவலைதளங்களில் வெளியாகி வந்தன. இதுபற்றி இப்போது பேசியுள்ள மஞ்சிமா மோகன் “என் திருமணத்தின் போது கூட என்னை உருவகேலி செய்தார்கள். இதையெல்லாம் நான் கண்டுகொள்வதில்லை. நான் இப்போது இருக்கும் உடலோடு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன்” எனக் கூறியுள்ளார்.