வியாழன், 23 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified: திங்கள், 31 அக்டோபர் 2022 (20:42 IST)

பிரபல நடிகர் மீதான காதலை உறுதி செய்த மஞ்சிமா மோகன்!

goutham karthick manjima mohan
.

தமிழ் சினிமாவில்   பிரபல நடிகை மஞ்சிமா மோகன் பிரபல  நடிகரை காதலிப்பதை உறுதி செய்துள்ளார்.
 

தமிழ் சினிமாவில் இளம்  நடிகர் கவுதம் கார்த்திக். இவர் மணிரத்னம் இயக்கிய கடல் படத்தில் நடிகராக அறிமுகம் ஆனார். அதன் பின்னர், இவன் தந்திரன், தேவராட்டம் , இருட்டு அறையில் முரட்டுக் குத்து, ஆனந்தம் விளையாடும் வீடு  உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.

இவர் அச்சம் என்பது மடமையடா என்ற படத்தில் நடித்த  நடிகை மஞ்சிமா மோகனை காதலிப்பதாக தகவல் வெளியான நிலையில்,    மஞ்சிமா மோகன்   இதை உறுதி செய்யாமல் இருந்தார்.

இந்த நிலையில், இன்று மஞ்சிமா மோகன் தன் டுவிட்டர் பக்கத்தில், இருவரும் நெருக்கமாக இருக்கும் புகைப்படத்தைப் பகிர்ந்துள்ளார்.

இதனால் இருவருக்கும் இடையேயான காதல் உறுதியாகியுள்ள இருவருக்கும் ரசிகர்கள் வாழ்த்துகள் தெரிவித்துவருகின்றனர்.

இந்தப் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Edited by Sinoj