வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. »
  3. சினிமா
  4. »
  5. சினிமா செய்தி
Written By
Last Modified: வெள்ளி, 4 ஏப்ரல் 2014 (15:22 IST)

‌சீனாவில் படமாகும் மணிரத்னம் படம்

மணிரத்னம் தனது அடுத்தப் படத்தை விரைவில் தொடங்குகிறார். இது ஹாலிவுட் நடிகர் மேட் டாமன் நடித்த Bourne சீரிஸைப் போன்ற ஸ்பை த்ரில்லர் என்று கூறப்படுகிறது.
 
கடல் படத்திற்குப் பிறகு மணிரத்னம் யாரை வைத்து எந்த மொழியில் படம் இயக்குவார் என்பது பெரிய கேள்விக்குறியாக இருந்தது. இந்நிலையில் தனது அடுத்தப் படத்தை தெலுங்கு, தமிழில் எடுக்க முடிவு செய்து நாகார்ஜுன், மகேஷ்பாபு, ஸ்ருதிஹாசன், ஐஸ்வர்யா ராய் ஆகியோரை ஒப்பந்தம் செய்தார். இசை ஏ.ஆர்.ரஹ்மான்.
 
இந்தப் படம் ஒரு ஸ்பை த்ரில்லர். ‌சீனாவில் படத்தின் முக்கியமான காட்சிகளை எடுக்க மணிரத்னம் திட்டமிட்டுள்ளார். டெல்லியிலும் பல காட்சிகள் எடுக்கப்பட உள்ளது. 
 
தொடர் தோல்விகளை சந்தித்து வரும் மணிரத்னத்துக்கு இது முக்கியமான படம். கமர்ஷியலாக வெற்றி பெற்றே ஆக வேண்டிய கட்டாயம். இந்தப் படம் இக்கட்டுகளிலிருந்து மணிரத்னத்தை மீள வைக்குமா? மீண்டும் விழ வைக்குமா?
 
பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.