செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By VM
Last Updated : வெள்ளி, 4 ஜனவரி 2019 (21:26 IST)

வெளியானது மணிகர்ணிகா டிரெய்லர்! ஜான்சி ராணியாக மெய்சிலிர்க்க வைத்த கங்கனா

இந்திய நாட்டின் வீரப் பெண்மணியான ஜான்சி ராணி லக்ஷ்மிபாயின் வாழ்க்கை வரலாற்றுப் படத்தில் ஜான்சி ராணி கதாப்பாத்திரத்தில் நடிக்கும் கங்கனா ரனாவத் நடித்துள்ளார். 
 
இந்த படம் இந்தி, தெலுங்கு, மற்றும் தமிழில் வெளியாக உள்ளது. மூன்று மொழிகளிலும் இன்று டிரெய்லர் வெளியாகி உள்ளது. காலையில் தெலுங்கிலும், மாலையில் தமிழிலும் வெளியானது. 
 
இரண்டு நிகழ்ச்சியிலும் நடிகை கங்கனா ரணாவத் கலந்து கொண்டார். இந்த டிரெய்லரில் ராணி லட்சுமி பாய் வேடத்தில் கங்கனா சூப்பராக நடித்துள்ளார். 
 
லட்சுமி பாய் ஆக வீரம் மிகுந்த பெண் வேடத்தில் துணிச்சலாக நடித்துள்ளார் கங்கனா ரணாவத். இந்த டீசர் இந்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. தமிழ் மற்றும் தெலுங்கிலும் மணகர்ணிகா டிரெய்லர் பெரும் வரவேற்பு பெற்று வருகிறது.