ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: சனி, 18 நவம்பர் 2023 (07:40 IST)

விஜய் சேதுபதி மணிகண்டன் வெப் சீரிஸில் இணைந்த பாலிவுட் நடிகர்!

இயக்குனர் மணிகண்டன் இயக்கிய காக்கா முட்டை மற்றும் குற்றமே தண்டனை ஆகிய படங்கள் மிகப்பெரிய அங்கிகாரத்தை அவருக்கு பெற்றுத் தந்தன. ஆண்டவன் கட்டளை படத்துக்குப் பிறகு 3 ஆண்டு இடைவெளியில் கடைசி விவசாயி படத்தை இயக்கி இந்த ஆண்டு தொடக்கத்தில் வெளியிட்டார். அந்த படம் பெரிய வெற்றி பெறவில்லை என்றாலும், விமர்சன ரீதியாக பாராட்டுகளைக் குவித்தது.

இந்நிலையில் மூன்றாவது முறையாக இருவரும் ஒரு படைப்புக்காக இணைந்துள்ளனர்.  ஆனால் இந்த முறை ஒரு படத்துக்காக அல்ல, வெப் சீரிஸ்க்காக. தமிழில் விஜய் சேதுபதி நடிக்கும் முதல் வெப் தொடராக உருவாகி வருகிறது. இந்த தொடருக்கு ராஜேஷ் முருகேசன் இசையமைக்கிறார்.

இந்த வெப்சீரிஸின் ஷூட்டிங் மதுரை சுற்று வட்டார பகுதிகளில் நடந்தது. இந்நிலையில் இந்த சீரிஸில் ஒரு முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்க பாலிவுட் நடிகர் ஜாக்கி ஷ்ராஃப் இணைந்துள்ளார். முன்னர் இந்த கதாபாத்திரத்தில் நடிகர் மம்மூட்டி நடிக்க இருந்தார். ஆனால் பின்னர் அவர் வெளியேறியதால் இப்போது ஜாக்கி ஷ்ராஃப் இணைந்துள்ளார்.