1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sasikala
Last Updated : வியாழன், 21 ஏப்ரல் 2016 (11:59 IST)

மணிரத்னம் படத்தின் பெயர் குருதிப்பூக்கள்...?

மணிரத்னம் படத்தின் பெயர் குருதிப்பூக்கள்...?

மணிரத்னத்தின் புதிய படத்தின் பெயர், குருதிப்பூக்கள் என ஒரு தகவல் பரவி வருகிறது.


 
 
மணிரத்னம் தனது படம் குறித்து எந்த செய்தியும் வெளியிடுவதில்லை. அவரது படத்துக்கு பாடல்கள் எழுதும் வைரமுத்து அவ்வப்போது படம் குறித்த தகவல்களை வெளியிடுவார். அல்லது நிருபர்கள் துப்பறிந்து செய்தி வெளியிடுவார்கள். 
 
இப்போது வைரமுத்து தனது பிஆர்ஓ பணியை நிறுத்திவிட்டார். ஓ காதல் கண்மணியின் தகவல்களை மீடியாவுக்கு அவ்வப்போது தந்தவர், அப்படத்தின் ஒளிப்பதிவாளர் பி.சி.ஸ்ரீராம்.
 
மணிரத்னத்தின் புதிய படம் குறித்து தினம் ஒரு தகவல்கள். படத்துக்கு, குருதிப் பூக்கள் என பெயர் வைத்திருப்பதாக சமீபத்திய செய்தி. ஆனால், வழக்கம்போல் இந்தத் தகவலை மணிரத்னம் தரப்பு மறுக்கவும் இல்லை ஒத்துக் கொள்ளவும் இல்லை.