வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Suresh
Last Modified: வெள்ளி, 9 அக்டோபர் 2015 (12:48 IST)

மணிரத்னம் படத்தில் நடிக்கும் நானி...?

மணிரத்னம் அடுத்து இயக்கும் படத்தில் கார்த்தி, துல்கர் சல்மான், கீர்த்தி சுரேஷ், நித்யா மேனன் நடிப்பதாக இருந்தது. இந்த வருட இறுதியில் படப்பிடிப்பை தொடங்குவதாக திட்டம்.


 

 
இந்நிலையில் படத்தை தெலுங்கிலும் எடுக்க மணிரத்னம் திட்டமிட்டதால் படப்பிடிப்பு அடுத்த வருடத்துக்கு தள்ளிப் போகும் நிலை ஏற்பட்டது.
 
இந்த மாற்றத்தால், மலையாளத்தில் புதிதாக இரண்டு படங்களில் கமிட்டாகியிருக்கும் துல்கர் சல்மானுக்கு மணிரத்னம் படத்தில் நடிக்க முடியாத நிலை. 
 
துல்கர் சல்மானுக்குப் பதில் மணிரத்னம் தமிழ், தெலுங்கு ரசிகர்களுக்கு பரிட்சயமான நானியை ஒப்பந்தம் செய்திருப்பதாக கூறப்படுகிறது. இது குறித்து இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை.