வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வெள்ளி, 9 ஜூலை 2021 (12:36 IST)

பொன்னியின் செல்வன் எப்போது முடியும்? மனம் திறந்த இயக்குனர் மணிரத்னம்!

பொன்னியின் செல்வன் படப்பிடிப்பு விரைவில் முடிய உள்ளதாக இயக்குனர் மணிரத்னம் தெரிவித்துள்ளார்.

தமிழ் சினிமாவின் அடையாளங்களில் ஒருவரான இயக்குனர் மணிரத்னம் இயக்கிவரும் ’பொன்னியின் செல்வன்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக கொரோனா வைரஸ் ஊரடங்கு காரணமாக நிறுத்தப்பட்டது. இந்த நிலையில் அடுத்தகட்ட படப்பிடிப்பு ஐதராபாத்தில் உள்ள ராமோஜி ராவ் பிலிம் சிட்டியில் நடந்து வருகிறது. தென்னிந்திய சினிமாவின் முக்கிய நட்சத்திரங்கள் எல்லாம் நடித்து வரும் இந்த படத்தின் படப்பிடிப்பை துரிதமாக முடிக்க மணிரத்னம் திட்டமிட்டுள்ளாராம்.

இந்நிலையில் தான் தயாரித்துள்ள நவரசா ஆந்தாலஜியின் ப்ரமோஷன் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அவர் பொன்னியின் செல்வன் பற்றி பேசியுள்ளார். அதில் ‘இன்னும் ஒரு ஷெட்யூல் முடியவேண்டியுள்ளது. இந்த காலகட்டத்தில் படப்பிடிப்பு நடத்துவது சிரமமானது. விரைவில் நடத்தி முடிப்போம். எனது எல்லாப் படங்களையும் விட பொன்னியின் செல்வன் பிரம்மாண்டமானது’ எனக் கூறியுள்ளார்.