1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Mahalakshmi
Last Modified: செவ்வாய், 31 மார்ச் 2015 (10:09 IST)

கேன்சரிலிருந்து இரண்டாவது முறையாக மீண்ட மம்தா மோகன்தாஸ்

கேன்சரால் பாதிக்கப்பட்டு சிகிச்சை எடுத்துக் கொண்ட மம்தா மோகன்தாஸை மலையாள திரையுலகம் எப்போதும் கௌரவமாகவே நடத்தியிருக்கிறது. அவர் முதல்முறை சிகிச்சை எடுத்துக் கொண்டு, நலமுடன் திரும்பிய போது வாய்ப்புகளை தாராளமாக வழங்கியது மலையாள சினிமா.
 

 
சமீபத்தில் மீண்டும் கேன்சரின் பாதிப்பு மம்தாவிடம் தெரிய ஆரம்பித்தது. மீண்டும் சிகிச்சை எடுத்துக் கொண்டார். தலைமுடி கொட்டிய நிலையில் குட்டை தலைமுடியுடன் படங்களில் நடித்தார். 
 
மலையாளத்தின் பிரபல இயக்குனர் ஷஃபி இயக்கத்தில் திலீப் நடிக்கும் புதிய படத்திலும் மம்தா மோகன்தாஸ்தான் ஹீரோயின். இதற்கு முன் திலீபும், மம்தாவும் பாசஞ்சர், மை பாஸ் படங்களில் இணைந்து நடித்துள்ளனர்.