எனக்கு வேறு வேலை இருக்கு… பிரதமரை தவிர்த்த மம்தா!
மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி பிரதமருடனான ஆலோசனைக் கூட்டத்தை தவிர்த்துள்ளார்.
யாஸ் புயல் இரு தினங்களுக்கு முன்னர் கரையைக் கடந்த மேற்கு வங்கம் மற்றும் ஒடிசா ஆகிய மாநிலங்களில் கடுமையான சேதங்களை ஏற்படுத்தியது. இதையடுத்து மோடி ஒடிசாவில் புயல் பாதித்த பகுதிகளை மேற்பார்வையிட்டார். அம்மாநில முதல்வரையும் சந்தித்து ஆலோசனை மேற்கொண்டார்.
அதன் அடுத்த கட்டமாக மேற்கு வங்கத்தை பார்வையிட சென்றார். விமான நிலையத்தில் மோடியை சந்தித்த மம்தா, நிவாரணத் தொகையாக 20000 கோடியை கேட்டிருந்தார். அதன் பின்னர் அதிகாரிகள் மற்றும் முதலமைச்சருடன் பிரதமர் மோடியுடன் நடந்த ஆலோசனைக் கூட்டத்தை தவிர்த்துள்ளார். கோப்புகளை அதிகாரிகளிடம் கொடுத்து தனக்கு வேறு வேலை இருப்பதாகக் கூறியுள்ளார். இது பிரதமரை அவமதிப்பு செய்யும் செயல் என பாஜகவினர் கண்டனம் தெரிவித்துள்ளார்.