தாதா சாகேப் விருது பெற்ற சூர்யாவுக்கு வாழ்த்துக்கள் – மம்மூட்டி ட்வீட்!
நடிகர் ரஜினிகாந்த் தாதா சாகேப் பால்கே விருது பெற்றதற்கு நடிகர் மம்மூட்டி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
நடிகர் ரஜினிகாந்த் இந்திய திரைத்துறையில் அளித்த சிறந்த பங்களிப்பிற்காக மத்திய அரசு அவருக்கு திரைத்துறையின் உயரிய விருதான தாதா சாகேப் பால்கே விருதை அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பு ரஜினி ரசிகர்கள் மட்டுமல்லாது சினிமா ரசிகர்களையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ள நிலையில் பலரும் ரஜினிக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்திற்கு வாழ்த்து தெரிவித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள மலையாள நடிகர் மம்மூட்டி “தாதா சாகேப் பால்கே விருது வென்ற சூர்யாவுக்கு வாழ்த்துக்கள். இப்படிக்கு தேவா” என்று குறிப்பிட்டுள்ளார்.
மணிரத்னம் இயக்கத்தில் வெளியான தளபதி படத்தில் சூர்யா என்ற கதாப்பாத்திரத்தில் ரஜினியும், தேவா கதாப்பாத்திரத்தில் மம்மூட்டியும் நடித்திருந்தனர். நட்பிற்கு உவமையாக இன்றளவும் பேசப்படும் சூர்யா – தேவா பெயர்களாலேயே மம்மூட்டி வாழ்த்து தெரிவித்துள்ளார்.