1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Prasanth Karthick
Last Modified: திங்கள், 17 ஜனவரி 2022 (10:45 IST)

மலையாள நடிகர் மம்மூட்டிக்கு கொரோனா! – ரசிகர்கள் அதிர்ச்சி!

திரைத்துறையினர் பலருக்கு கொரோனா உறுதியாகி வரும் நிலையில் மலையாள நடிகர் மம்மூட்டிக்கு கொரோனா உறுதியாகியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியா முழுவதும் கொரோனா பாதிப்புகள் மீண்டும் வேகமாக அதிகரிக்க தொடங்கியுள்ள நிலையில் தினசரி பாதிப்புகள் 2 லட்சத்தை தாண்டியுள்ளது. இந்நிலையில் பாலிவுட் முதல் அனைத்து சினிமா நடிகர்களிடையேயும் கொரோனா பரவி வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் தற்போது பிரபல மலையாள சினிமா நடிகரான மம்மூட்டிக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. இதுகுறித்து ட்விட்டரில் தெரிவித்துள்ள அவர் தன்னை தானே வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.