1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: திங்கள், 12 ஆகஸ்ட் 2019 (14:25 IST)

பேரன்பு படத்துக்கு ஏன் விருது இல்லை – ரசிகர்கள் கோபம்… நடுவர் பதில் !

மம்மூட்டி நடித்து கடந்த ஆண்டு வெளியானப் படமான பேரன்பு படத்திற்கு ஏன் தேசிய விருது அளிக்கப்படவில்லை என அவரது ரசிகர்கள் சமூகவலைதளங்களில் கோபமாக பேசியுள்ளனர்.

66 ஆவது ஆண்டு தேசிய விருதுகள் கடந்த சில தினங்களுக்கு முன்னர் அறிவிக்கப்பட்டன.  அதில் தென் இந்தியாவில் இருந்து மிகவும் எதிர்பார்க்கப்பட்ட பரியேறும் பெருமாள், மேற்கு தொடர்ச்சி மலை மற்றும் பேரன்பு போன்ற படங்களுக்கு விருதுகள் இல்லாமல் இருந்தது மிகவும் ஏமாற்றமாக இருந்தது.

இதையடுத்து சில மம்மூட்டி ரசிகர்கள் சமூகவலைதளங்களில் இது குறித்துக் கோபமாக பதிவிட்டனர். இன்னும் ஒரு சிலர் நடுவர் குழுவை அசிங்கமாகத் திட்டி நடுவர் குழுவின் தலைவர் ராகுல் ராவைலை அதில் டேக் செய்தனர். இதைப் பார்த்து அதிருப்தியுற்ற ராகுல் ராவைல் ‘மம்மூட்டி அவர்களே உங்கள் ரசிகர்கள் வெறுப்பை உமிழும் பதிவுகளை வெளியிடுகின்றனர்.  ஆகவே நான் நேரடியாகவே கூறுகிறேன், முதலில் நடுவரின் தீர்ப்பை யாரும் கேள்வி கேட்க முடியாது. இரண்டாவதாக உங்கள் 'பேரன்பு' படம் உங்கள் பிராந்தியக் குழுவினராலேயே நிராகரிக்கப்பட்ட ஒன்று. ஆகவே மையக்குழுவில்  இருந்த நாங்கள் ஒன்றும் செய்ய இயலாது’ எனத் தெரிவித்து அதில் மம்மூட்டியையும் டேக் செய்தார். இதைப்பார்த்த மம்மூட்டி ரசிகர்கள் சார்பாக அவரிடம் மன்னிப்புக் கோரினார்.