புதன், 25 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: திங்கள், 27 ஜூன் 2022 (15:26 IST)

கமலின் அடுத்த படத்தில் மம்மூட்டி… ஆரம்பித்த பேச்சுவார்த்தை!

நடிகர் கமல் அடுத்து நடிக்கும் படத்தில் மம்மூட்டியை நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடத்தப்படுவதாக சொல்லப்படுகிறது.

விக்ரம் படத்தின் மிகப்பெரிய வெற்றியை அடுத்து கமல் நடிக்கும் அடுத்த படத்துக்கான எதிர்பார்ப்பு அதிகமாகியுள்ளது. இதையடுத்து அந்த படத்தை விஸ்வரூபம் படத்தின் படத்தொகுப்பாளர் மகேஷ் நாராயணன் இயக்க உள்ளார். இதை கமல்ஹாசனே அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

இந்த படத்தில் முக்கிய வேடம் ஒன்றில் நடிக்க மலையாள நடிகர் மம்மூட்டியிடம் பேச்சுவார்த்தை நடந்துவருவதாக சொல்லப்படுகிறது. இந்த தகவல் கமல் மற்றும் மம்மூட்டி ரசிகர்களுக்கு மிகப்பெரிய இன்ப அதிர்ச்சியாக அமைந்துள்ளது.