வியாழன், 9 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sasikala
Last Modified: வியாழன், 30 மார்ச் 2017 (11:47 IST)

மம்மூட்டி, ஆர்யா நடித்த படம் திரைக்கு வரும் முன்பே இணையதளத்தில் கசிவு!

தற்போது சினிமா படங்கள் திரைக்கு வருவதற்கு முன்பே இணையதளத்தில் வெளியாகும் சம்பவங்களும் அடிக்கடி நடந்து  வருகிறது. மலையாள பட உலகில் சூப்பர் ஸ்டாராக திகழ்பவர் மம்முட்டி. தற்போது ‘கிரேட் பாதர்’ என்ற புதிய மலையாள படத்தில் நடித்து உள்ளார். அவருக்கு ஜோடியாக நடிகை சினேகா நடித்துள்ளார். 

 
இந்த புதிய திரைப்படம் இன்று (30-ந்தேதி) திரையிடப்படும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில் இந்த படத்தின் முக்கிய காட்சிகள் 28 ஆம் தேதியே இணையதளங்களில் வெளியாகி விட்டதாம். நடிகர்கள் ப்ரித்விராஜ், ஆர்யா, சந்தோஷ் சிவன், ஷாஜி நடேசன் தயாரித்துள்ள மலையாள படம் தி கிரேட் ஃபாதர். படத்தில் மம்மூட்டி, ஆர்யா, சினேகோ உள்ளிட்டோர் நடித்துள்ளனர். ஹனீப்  இயக்கியுள்ள இந்த படம் இன்று ரிலீஸாகியுள்ளது.