1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: திங்கள், 7 டிசம்பர் 2020 (16:49 IST)

மாலத்தீவுக்கு இலவசமாக சுற்றுப்பயணம் செல்ல வேண்டுமா? இது மட்டும்தான் தேவை!

நடிகைகளுக்கு இருக்கும் பாலோயர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப மாலத்தீவில் இலவசமாக சொகுசு சேவையை நட்சத்திர ஹோட்டல்கள் அளிக்கின்றன.

நடிகைகள் வேதிகா, டாப்ஸி, சமந்தா உள்ளிட்ட நடிகைகள் மாலத்தீவுக்கு சுற்றுலா சென்று அங்கே எடுக்கப்பட்ட கவர்ச்சிகரமான புகைப்படங்களை சமூகவலைதளங்களில் வெளியிட்டு வந்தனர். அதே போல புதிதாக திருமணமான காஜல் அகர்வாலும் தேனிலவுக்கு மாலத்தீவுக்கு சென்றார். நடிகைகள் பொதுவாக சுற்றுலா மற்றும் தேனிலவு என்றால் ஐரோப்பிய நாடுகளுக்கு செல்வதுதான் வழக்கம்.

ஆனால் இப்போது மாலத்தீவுக்கு செல்வது அதிகரித்துள்ளதன் பின்னணியில் ஒரு காரணம் உள்ளது. மாலத்தீவுகளில் சுற்றுலாப் பயணிகளை கவர்வதற்காக புதிய திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதில் ஒன்றுதான் நடிகைகளை இல்வசமாக அந்த தீவுக்கு வரவழைத்து அவர்களுக்கு தங்குமிடம், உணவு உள்ளிட்டவற்றை இலவசமாக அளித்து வருகின்றனர்.

இந்நிலையில் அப்படி இலவசமாக அந்த நட்சத்திரங்கள் வந்து செல்ல வேண்டுமென்றால் இன்ஸ்டாகிராம் போன்ற சமூகவலைதளங்களில் அவர்கள் வைத்திருக்கும் பாலோயர்களின் எண்ணிக்கை முக்கியமாம. நடிகைகள் தாங்கள் வைத்திருக்கும் பாலோயர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப அவர்களுக்கு தரப்படும் சொகுசு வசதிகள் அமையுமாம்.