நடிக்க வாய்ப்பு கேட்ட பெண்ணை, உடலுறவுக்கு பயன்படுத்திய புகைப்பட கலைஞர்!!


Sugapriya Prakash| Last Modified வெள்ளி, 28 ஜூலை 2017 (17:33 IST)
நடிக்க வாய்ப்பு கேட்டு வந்த பெண்ணை, பல முறை உடலுறவு கொண்டு ஏமாற்றிய தமிழ் மற்றும் புகைப்பட கலைஞரை போலீஸார் கைது செய்துள்ளனர்.

 
 
அமெரிக்காவை சேர்ந்த மலையாள பெண் டாக்டர் படங்களில் நடிக்க வாய்ப்பு கேட்டு ஜின்சன் லோனப்பன் என்ற புகைப்பட கலைஞரை சந்தித்துள்ளார்.
 
அவரும் அந்த பெண்ணுக்கு வாய்ப்பு வாங்கி தருவதாக உறுதி அளித்துள்ளார். மேலும், இயக்குனர்கள், தயாரிப்பாளர்களிடம் காண்பிக்க புகைப்படங்கள் வேண்டும் என கூறி அந்த பெண்ணை நிர்வாணமாக புகைப்படம் எடுத்துள்ளார்.
 
இதை தவிர்த்து பட வாய்ப்பு வாங்கித் தருவதாக கூறி அவர் அந்த பெண்ணுடன் பலமுறை படுக்கையை பகிர்ந்துள்ளார், பணமும் பெற்றுள்ளார்.
 
ஒரு கட்டத்தில் உண்மையை அறிந்த அந்த பெண், பணத்தை திரும்ப கொடுக்குமாறு கேட்டுள்ளார். பணத்தை திரும்பி கொடுக்க ஜின்சன் கொடுத்த செக் பவுன்ஸ் ஆகியது. 
 
இதையடுத்து அந்த பெண் ஜின்சன் மீது போலீசில் பலாத்கார புகார் அளித்தார். போலீஸார் தற்போது அவரை கைது செய்துள்ளனர்.

webdunia

இதில் மேலும் படிக்கவும் :