"மாஸ்டர்" எபெஃக்டில் மாளவிகா மோகனன் - அட்டகாசமான நியூ லுக் போஸ்டர்...!
சூப்பர் ஸ்டார் ரஜினியின் பேட்ட படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு என்ட்ரி கொடுத்த நடிகை மாளவிகா மோகனன் தற்போது தளபதி விஜய்க்கு ஜோடியாக மாஸ்டர் படத்தில் நடித்து வருகிறார். லோகேஷ் கனகராஜ் இயக்கும் இப்படத்தில் விஜய்க்கு வில்லனாக விஜய் சேதுபதி நடிக்கிறார்.
ராக்ஸ்டார் அனிருத் இசையமைக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு டெல்லி, கர்நாடகா ஆகிய இடங்களில் நடைபெற்று வருகிறது. வருகிற ஏப்ரல் மாதம் கோடை விடுமுறை தினத்தை குறிவைத்து வெளியாகவுள்ள இப்படத்தின் இரண்டு போஸ்டர்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருந்தது .
இந்நிலையில் தற்போது படத்தின் நாயகி மாளவிகா மோகன் விஜய்யின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் போன்றே ப்ளர் இமேஜ் ஒன்றை பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படத்தை கண்ட ரசிகர்கள் இது தான் உங்களது கேரக்டர் லுக்கா என கேட்டு கமெண்ட்ஸ் செய்து வருகின்றனர். இன்னும் ஒரு சிலர் 3ம் லுக் போஸ்டரா..? என சந்தேகத்துடன் கேள்வி எழுப்பி வருகின்றனர்.