நடிகைகள் போதைப்பொருள் பயன்படுத்தியது உறுதி!
பிரபல நடிகைகளான சஞ்சனா , ராகினிதிவேதி போன்றோர் போதைப்பொருள் பயன்படுத்தியது உறுதி செய்யப்பட்டுள்ளது.
சமீபத்தில், போதைப் பொருட்களைப் பயன்படுத்தியயது மற்றும் அதனை விற்பனை செய்யும் கும்பலுடன் தொடர்பில் இருந்ததாக கன்னட நடிகைகள் ராகிணி திவேதியும், சஞ்சனா கல்ராணியும் குற்றம்சாட்டப்பட்டு போலீஸாரால் கைது செய்யப்பட்டனர்.
இந்த வழக்கு விசாரணையில் நடிகைகள், சஞ்சனா கல்ராணி மற்றும் ரஜினி இருவரும் போதைப்பொருள் பயன்படுத்தியிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.