1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By VM
Last Modified: சனி, 2 மார்ச் 2019 (14:30 IST)

மேஜர் சந்தீப் வாழ்க்கை படமாகிறது! தயாரிக்கப்போவது சூப்பர் ஸ்டார்!

மும்பை தாக்குதலில் வீரமரணம் அடைந்த மேஜர் சந்தீப் வாழ்க்கையை படமாக்க உள்ளார்கள்


 
மும்பையில் உள்ள தாஜ் ஓட்டலில் கடந்த 2008-ல் பாகிஸ்தானில் இருந்து வந்த பயங்கரவாதிகள், துப்பாக்கியால் கண்ணில் படுபவர்களை எல்லாம் சுட்டனர். இதில் சுமார் 180 பேர் உயிரிழந்தனர். அரபிக் கடல் வழியாக மும்பை நகருக்குள் நுழைந்து  பயங்கரவாத சம்பவத்தை நிகழ்த்திய பயங்கரவாதிகள், தேசிய பாதுகாப்பு படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டனர். 
 
தேசிய பாதுகாப்பு படை கமாண்டோ மேஜர் சந்தீப் உன்னி கிருஷ்ணன் இந்த தாக்குதலில் பயங்கரவாதிகளுடன் மோதி தனது உயிரை தியாகம் செய்தார்.
 
 
இவரது வாழ்க்கை சினிமா படமாகிறது. இந்தி, தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் எடுக்கின்றனர். இந்த படத்துக்கு மேஜர் என்று பெயரிடப்பட்டு உள்ளது. இதில் மேஜர் சந்தீப் வேடத்தில்  நடிகர் அத்விக் சேஷ் நடிக்க உள்ளார். சசிகிரன் டிக்கா இயக்க உள்ளார்.  தெலுங்கு நடிகர் மகேஷ் பாபு இந்த படத்தை தயாரிக்கிறார். படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளது.