செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: திங்கள், 7 ஜூன் 2021 (16:25 IST)

கைதி இந்தி ரீமேக்கில் காஜல் அகர்வால்… முக்கிய மாற்றத்தை செய்யும் படக்குழு!

கார்த்தி நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியாகி மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற கைதி திரைப்படம் இப்போது இந்தியில் ரீமேக் செய்யப் பட உள்ளது.

இந்த படத்தை தமிழில் தயாரித்த எஸ் ஆர் பிரபுவே இந்தியிலும் ரிலையன்ஸ் நிறுவனத்தோடு இணைந்து தயாரிக்கிறார். கார்த்தி நடித்த கதாபாத்திரத்தில் அஜய் தேவ்கன் நடிக்க உள்ளார். இப்போது திரைக்கதை அமைக்கும் பணிகள் நடந்துவரும் நிலையில் திரைக்கதையில் ஒரு முக்கியமான மாற்றமாக படத்தில் கதாநாயகி பாத்திரம் ஒன்றை புகுத்த உள்ளார்களாம்.

தமிழில் கதாநாயகியே இல்லை என்ற போதும் கார்த்தி சொல்லும் தன்னுடைய பிளாஷ் பேக் வசனங்களை காட்சிகளாக மாற்றப் போகிறார்களாம். அதில் அஜய் தேவ்கனின் மனைவி கதாபாத்திரத்தில் நடிக்கதான் காஜலிடம் பேச உள்ளார்களாம்.