வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Mahalakshmi
Last Updated : வியாழன், 30 ஜூலை 2015 (15:02 IST)

தமிழில் மகேஷ்பாபு குரலில் செல்வந்தனாக வெளியாகும் ஸ்ரீமந்துடு

மகேஷ் பாபு படங்களுக்கு தமிழில் ஓரளவு வரவேற்பு உள்ளது. அவரது நந்து, குமரன் படங்கள் தமிழில் நன்றாக ஓடின. முதல்முறையாக மகேஷ் பாபு நடித்த படமொன்று ஆந்திராவில் வெளியாகும் அதேநாள் தமிழில் மொழிமாற்றம் செய்து வெளியிடப்படுகிறது.

 
கொரட்டலா சிவா இயக்கத்தில் மகேஷ் பாபு நடித்திருக்கும் படம், ஸ்ரீமந்துடு. இந்தப் படத்தில் நாயகியாக ஸ்ருதி நடித்துள்ளார். ஆகஸ்ட் 7 -ஆம் தேதி படம் திரைக்கு வருகிறது.

ஸ்ரீமந்துடுவை செல்வந்தன் என்ற பெயரில் தமிழில் அதேநாளில் - ஆகஸ்ட் 7 - வெளியிடுகின்றனர். மகேஷ் பாபு சென்னையில் படித்து வளர்ந்தவர் என்பதால் தமிழ் சரளமாக வரும். அதனால் அவரே செல்வந்தனுக்கு டப்பிங் பேசியுள்ளார்.

செல்வந்தனின் பாடல்கள் வெளியீட்டுவிழா நாளை சென்னையில் நடக்கிறது.