வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : வியாழன், 28 டிசம்பர் 2017 (21:16 IST)

உதயநிதி ஸ்டாலின் படத்துக்கு ‘நிமிர்’ என தலைப்பு வைத்தது யார் தெரியுமா?

உதயநிதி ஸ்டாலின் படத்துக்கு ‘நிமிர்’ என்று தலைப்பு வைத்தது யார் என்ற விவரம் கிடைத்துள்ளது. உதயநிதி ஸ்டாலின், நமீதா பிரமோத் மற்றும் பார்வதி நாயர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘நிமிர்’. பிரியதர்ஷன் இயக்கியுள்ள இந்தப் படம், மலையாளத்தில் வெளியான ‘மகேஷிண்டே பிரதிகாரம்’ படத்தின் ரீமேக். இயக்குநர்கள் மகேந்திரன், சமுத்திரக்கனி, எம்.எஸ்.பாஸ்கர் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
 
“எனது ஆரம்ப காலத்திலிருந்தே இயக்குனர் மகேந்திரனின் பெரிய  ரசிகன் நான். அவரிடம் உதவி இயக்குனராக பணிபுரிய ஆசைப்பட்டேன். ஆனால் எனக்கு அந்த வாய்ப்பு கிடைக்கவே இல்லை. அவர் 'நிமிர் ' படத்தில் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருப்பது எனக்கு மிக பெருமையான விஷயம். நான் பல காலமாக ஒருவருக்கு ரசிகனாக இருந்து, தற்பொழுது அவரையே இயக்குவது என்பது மிகப்பெரிய சந்தோஷத்தை தருகின்ற ஒரு உணர்வு. 
 
இப்படத்தின் கதையை முழுவதும் கேட்டதும் மகேந்திரன் சார் தான் 'நிமிர்' என்ற தலைப்பை பரிந்துரை செய்தார். இக்கதைக்கு இதை விட பொருத்தமான தலைப்பை எங்களால் யோசிக்க முடியாது. படத்தில் ஹீரோவின் தந்தை கதாபாத்திரத்தில் மகேந்திரன் சார் நடித்துள்ளார். இந்த மகன்-தந்தை உறவே இக்கதையின் அடித்தளம் ஆகும். 'நிமிர்' மிகவும் திருப்திகரமாக வந்துள்ளது” என்கிறார் பிரியதர்ஷன்.