1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வெள்ளி, 27 ஆகஸ்ட் 2021 (16:02 IST)

ஏ ஆர் முருகதாஸ் உதவியாளர் இயக்கத்தில் மஹத்!

இயக்குனர் ஏ ஆர் முருகதாஸின் உதவியாளர் செந்தில் இயக்கும் புதிய படத்தில் மஹத் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார்.

நடிகர் சிம்புவின் குழந்தைப் பருவ நண்பரான மஹத் ராகவேந்திராவை அவர் வல்லவன் படத்தில் ஒரு சிறு வேடத்தில் நடிக்க வைத்தார். அதன் பின்னர் மங்காத்தா படத்தில் அவரின் வேடம் கவனம் பெறவே அடுத்தடுத்து சில படங்களில் நடித்தார். பின்னர் பிக்பாஸ் வீட்டுக்கு சென்று வந்தார். அதன் பின்னரும் பெரிதாக அவருக்கு வாய்ப்புகள் வரவில்லை.

இந்நிலையில் இப்போது தெலுங்கின் முன்னணி ஓடிடி நிறுவனமான ஆஹாவுக்காக ஏ ஆர் முருகதாஸின் உதவியாளர் செந்தில் இயக்கும் புதிய படத்தில் கதாநாயகனாக நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார்.