கல்யாணம் ஆகி ஒரே வருடத்தில் விவாகரத்தா...? முற்றுப்புள்ளி வைத்த மகாலட்சுமி!
பிரபல தயாரிப்பாளர் ரவீந்திரன் கடந்த ஆண்டு சீரியல் நடிகை மகாலட்சுமியை திருமணம் செய்துக்கொண்டார். இவர்கள் இருவரும் காதலித்து திருமணம் செய்ததை ஒருவருக்கொருவர் பணத்திற்காகவும், அழகுக்காக கல்யாணம் செய்துக்கொண்டதாக நெட்டிசன்ஸ் மோசமாக விமர்சித்தனர்.
ஆனால், அதையெல்லாம் கண்டுகொள்ளாமல் இருவரும் ஜாலியாக வாழ்ந்து வந்தார்கள். ஆனால் கடந்த இரண்டு நாட்களாக ரவீந்தர் சோகமான பதிவுகளை போட்டு மனைவியை பிரிந்துவிட்டது போல் மறைமுகமாக பதிவிட்டிருந்தார்.
இதனால் திருமணம் ஆன ஒரு வருடத்தில் இருவரும் விவாகரத்து செய்துவிட்டதாக செய்திகள் வெளியானது. இந்நிலையில் இதற்கு முற்றுப்புள்ளி வாய்த்த மகாலக்ஷ்மி ரவீந்தர் உடன் கட்டியணைத்து நெருக்கமாக எடுத்துக்கொண்ட ரொமான்டிக் போட்டோ ஒன்றை வெளியிட்டு, " நீ என்னைச் சுற்றி கைகளை வைக்கும் போது, இந்த உலகில் என்னால் முடியாதது எதுவுமே இல்லை என்று எனக்கு தெரியப்படுத்துகிறாய்.. நான் உன்னை முழு மனதுடன் நேசிக்கிறேன் அம்மு என பதிவிட்டுள்ளார்.