திங்கள், 2 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Prasanth Karthick
Last Updated : ஞாயிறு, 2 பிப்ரவரி 2020 (15:39 IST)

ஆர்யாவுக்கு வில்லனான ஆர்யா பட இயக்குனர்!

ஆர்யா நடிக்க பா.ரஞ்சித் இயக்க உள்ள படத்தில் வில்லனாக பிரபல இயக்குனர் அறிமுகம் ஆக உள்ளார்.

தமிழில் கபாலி, காலா போன்ற ஹிட் படங்களை கொடுத்த இயக்குனர் பா.ரஞ்சித் அடுத்ததாக இந்தியில் படம் எடுப்பதற்கான முயற்சிகளில் ஈடுபட்டார். பிர்சா முண்டாவின் வாழ்க்கை வரலாற்றை படமாக எடுப்பதற்கு முயற்சிகள் மேற்கொண்டு வந்த பா.ரஞ்சித் தற்போது தமிழில் ஒரு படத்தை இயக்க முடிவெடுத்துள்ளார்.

குத்துச்சண்டையை மையப்படுத்தி உருவாகும் இந்த படத்திற்கு ‘சல்ப்பேட்டா’ என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த படத்தில் ஆர்யா கதாநாயகனாக நடிக்க இருக்கிறார். வில்லன் கதாப்பாத்திரத்தில் தடம் பட இயக்குனர் மகிழ்திருமேனி நடிக்க இருக்கிறார். இவர் ஏற்கனவே ஆர்யா நடிப்பில் மீகாமன் என்ற படத்தை இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.