1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified: புதன், 10 பிப்ரவரி 2021 (21:13 IST)

விஷாலின்’’சக்ரா ’’பட முதல் சிங்கில் ரிலீஸ்...இணையதளத்தில் வைரல்

விஷால் நடித்து எம்.எஸ்.ஆனந்தன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘சக்ரா’. ஸ்ரதா ஸ்ரீநாத், ரெஜினா கசாண்ட்ரா உள்ளிட்டோர் நடித்துள்ள இந்த படம் திரையரங்குகளில் வெளியிடுவதாக விஷால் முடிவெடுத்துள்ளார்.

 
விஷாலின் சக்ரா படம் வரும் பிப்ரவரி 19-ம் தேதி இப்படம் வெளியாகவுள்ளதாக நடிகர் விஷால் நேற்று அதிகாரப்பூர்வமாக தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்ததுடன், இப்படத்தின் தமிழ் வெர்சனுக்கு யு/ஏ என்று சென்சார் சான்றிதழ் வழங்கியுள்ளதாகவும் தெலுங்கு வெர்சனுக்கு சென்சார் இனிமேல் வழங்கவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும் தற்போது சக்ரா படத்தின் டீசர் நேற்று வெளியாகி பெரும்  வரவேற்பைப் பெற்றது. இதனல் படக்குழுவினரும், விஷாலின் ரசிகர்களும் மகிழ்ச்சி அடைந்தனர். மிகவும் ஸ்டைலிஷான தோற்றத்தில் விஷாலின் மிரட்டலான நடிப்பும்,  யுவன்சங்கர் ராஜாவின் இசையும் அனைவரையும் கவர்ந்துள்ளது.

இப்படத்தில் இடம்பெற்றுள்ள அம்மா பாடல்( தெலுங்கு, தமிழ் )  தற்போது, ரிலீசாகியுள்ளது. இதற்கு லைக்குகள் குவிந்து வரும் நிலையில், சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இப்பாடலை சின்மயி மற்றும் பிரார்த்தனா இந்திரஜித் இணைந்து பாடியுள்ளனர். இந்த அம்மா பாடல் அனைத்து அம்மாக்கள் மற்றும் மகள்களுக்கான இப்பாடல் சமர்பிப்பதாக படக்குழு தெரிவித்துள்ளது.