விஜயகாந்த மகன் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர்


Abimukatheesh| Last Updated: சனி, 29 ஜூலை 2017 (18:32 IST)
விஜயகாந்த மகன் சண்முக பாண்டியன் நடிக்கும் மதுரவீரன் படத்தின் பஸ்ட் லுக் போஸ்டரை விஜயகாந்த் அவர்கள் வெளியிட்டார்.

 

 
விஜயகாந்தின் இளைய மகன் சண்முக பாண்டியன், ’சகாப்தம்’ என்ற படத்தின் மூலம் தமிழ் திரையுலகுக்கு கதாநாயகனாக அறிமுகமானார். அடுத்து இவர் கதாநாயகனாக நடித்து வரும் புதிய படத்துக்கு ‘மதுரவீரன்’ என்று பெயரிடப்பட்டுள்ளது. ஜல்லிக்கட்டு விளையாட்டை கருவாக கொண்ட படம் மதுரவீரன். 
 
இந்த படத்தில், சண்முக பாண்டியன் ஜோடியாக புதுமுகம் நாயகி மீனாட்சி நடிக்கிறார். இவர்களுடன் சமுத்திரகனி, மைம்கோபி மொட்டை ராஜேந்திரன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள். P.G.முத்தையா படத்தை இயக்கி அவரே ஒளிப்பதிவு வேலையையும் செய்து வருகிறார். தற்போது இந்த படத்தின் ப்ர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது.

webdunia

இதில் மேலும் படிக்கவும் :