வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : திங்கள், 19 ஆகஸ்ட் 2019 (16:53 IST)

" வந்தாரை வாழ வைக்கும் தமிழ்நாடு தமிழனை சாவடிக்கும் " இது தான் மதுக்கு நடந்த அநீதி!

பிக்பாஸ் வீட்டில் காவேரி தண்ணீர் பிரச்சனையை பற்றி மதுமிதா பேசி இருக்கிறார். ஆனால் அதை பேச கூடாதுன்னு என்று பிக்பாஸ் சொன்னதால் சரி என்று மது விட்டுவிட்டார். ஆனால் மறுபடியும் ஷெரின் நீ எப்படி பேசலாம் என்று  கேட்க..என் இஷ்டம் நான் பேசுவேன் அதை தொலைக்காட்சியில் போட்டால் போடடும் இல்லையென்றால் விட்டுவிடட்டும் என்று மது சொல்லி இருக்கிறார். 


 
இதில் வனிதா மூக்கை நுழைத்து நீ பேசியது தவறு என  சொல்ல ...சேரன், கஸ்தூரி மட்டும் நீ அந்த பேச்ச விடு என சொல்கிறார்கள்.  பிக்பாஸ் வீட்டிலிருக்கும் மற்ற கூஜாக்கள்  ஷெரிடம் மன்னிப்பு கேளு என மதுமிதாவுக்கு ப்ரெஷர் கொடுத்து நீ பிக்பாஸின் தலைவராக இருப்பதற்கு தகுதியற்றவள் என வெறுப்பு ஏற்றி மதுவை அவமான படுத்தியுள்ளார்கள். நீ உள்ள இருந்தால்  நாங்கள் யாரும் இருக்க மாட்டோம் என்று மதுமிதாவை தொடர்ந்து ப்ளாமெயில் செய்திருக்கிறார்கள்.
 
இந்த பிரச்சனையை பற்றி  பிக்பாஸும் எந்த அறிவிப்பும் சொல்லாததால் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளான மதுமிதா கையை கிழித்துக்கொள்கிறார். இதுவே வேற ஒரு மாநிலம் என்றால்  பத்தி எரியும் ஆனால் இங்கு இவர்களெல்லாம் ஒன்னுத்துக்கும் துப்பு இல்லை .. "வந்தாரை வாழவைக்கும் தமிழகம் தமிழனை சாவடிக்கும்" என நெட்டிசன்ஸ் ஒருவர் மதுவுக்கு நடந்த அநீதியை குறித்து ஆக்ரோஷத்துடன் எழுதியுள்ளார்.